- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரில் அசத்தப்போகும் இந்திய போர் குதிரை அவர் தான்.. மறந்துடாதீங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் போர் குதிரை அவர்தான் : ரவிச்சந்திரன் அஷ்வின்

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் சவால் வாய்ந்த தொடராக மாறியுள்ளது. அதன் காரணமாக அனைவரது கவனமும் இந்த தொடரின் மீது திரும்பி இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி திறம்பட செயல்பட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து தனது கருத்தினை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடரில் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தால் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும். ஏனெனில் குல்தீப் யாதவ் தேவையான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றி போட்டியை திருப்பும் வல்லமை கொண்டவர். அதேபோன்று பும்ரா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே பந்துவீச்சில் முன்னிலையில் இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

- Advertisement -

இந்த தொடரை பொறுத்தவரை ஜடேஜா நல்ல கட்டுப்பாட்டை கொடுக்கக்கூடிய வீரராக இருக்கிறார். ஏனெனில் அவரால் சிறப்பாக பந்துவீசவும் முடியும், பேட்டிங்கில் பெரியளவு பங்களிப்பினை வழங்கவும் முடியும் அது நமக்கு கூடுதல் பலம்.

இதையும் படிங்க : இணையற்ற சச்சின் மாதிரி இதெல்லாம் செய்யாத வரை.. சூர்யவன்சிக்கு இந்திய சான்ஸ் தராதீங்க.. ராஜு பேட்டி

அதேபோன்று ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தனது திறனை வெளிப்படுத்திய முகமது சிராஜை நாம் விட்டுவிடக்கூடாது. அவர் இந்திய அணிக்கு ஒரு போர் குதிரை மாதிரியானவர். எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் தனது முழு பங்களிப்பையும் வழங்கக்கூடிய அவர் இந்த தொடரில் முக்கிய வீரராக இருப்பார் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -