இதுவே எனக்கு போதும். நான் ஹேப்பியா தான் இருக்கேன் – வாய்ப்பு குறித்து மனம்திறந்த அஷ்வின்

Ashwin

அஸ்வின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்கி தற்போது நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து டெஸ்ட் ஒருவரை இதுவரை இல்லாத அளவுக்கு அபாரமாக விளையாடி உள்ளார். தொடர்ந்து பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக ஆடி வந்ததன் காரணமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் டாப் டென் பவுலர்ககளில் இரண்டாம் இடத்திற்கும் மற்றும் டாப் டென் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அபாரமான பார்மில் உள்ள அஸ்வினை ஏன் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பிசிசிஐ ஆட வாய்ப்பதில்லை என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Ashwin

111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 150 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியிருக்கிறார். அவரது பவுலிங் எக்கனாமி 4.92 ஆகும்.மேலும் ஒரு முறை ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இவரது பவுலிங்கை காணமே 6.98 ஆகும். மேலும் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஒருமுறை இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவ்வளவு அற்புதமாக ஆடிய அஸ்வின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.

Ashwin

லிமிடெட் ஓவர் போட்டிகளில் உங்களை புறக்கணிக்கப்படுவது நியாயம் அல்ல.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அஸ்வினிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன் இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்து வருகிறது. ஆனால் பலரும் நான் ஏன் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுவதில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் அது எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. நான் என் பணியை சரியாக செய்து வருகிறேன்.

- Advertisement -

ashwin

மேலும் அதைப் பற்றி எல்லாம் நான் பெரிதாக யோசிப்பதில்லை , நான் எனது வாழ்நாளில் தற்சமயத்தில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து அதனை ரசித்து வருகிறேன் என்று கூறி முடித்து விட்டார். அஸ்வினது இந்த கூலான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.