லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடாததுக்கு காரணம் இதுதான் – உண்மையை சொன்ன அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை மழை தட்டிப் பறித்தது. அதன் பின்னர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் வருகிற 25-ஆம் தேதி துவங்க உள்ளது.

indvseng

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் தமிழக வீரர் அஷ்வின் விளையாடவில்லை என்று கோலி தெரிவித்ததும் சமூகவலைதளத்தில் அவர்மீது மிகப்பெரிய விமர்சனம் எழுந்தது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஷ்வினை நீக்கிவிட்டு ஜடேஜாவை எப்படி சேர்க்கலாம் ? என்றும் அஷ்வின் உலகிலுள்ள எந்த பேட்ஸ்மேனுக்கும் எதிராக சிறப்பாக பந்து வீச கூடியவர் என்றும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் எழுந்து வந்தன.

அதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் விளையாடாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்நிலையில் தான் ஏன் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்பது குறித்து அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில் :

Ashwin

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான் விளையாட வேண்டியது தான். மேலும் அந்த போட்டியில் நான் விளையாடுகிறேன் என்று என்னிடம் சொல்லி விட்டார்கள். அதனால் நானும் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த வேளையில்தான் போட்டி துவங்குவதற்கு முன்பு மழை பெய்தது. மழை பெய்ததன் காரணமாக அணியில் 4 பந்து வேகப்பந்துவீச்சாளர் உடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Ashwin

இதன் காரணமாகவே நான் இரண்டாவது டெஸ்டில் களம் இறங்கவில்லை என்று அஸ்வின் தெரிவித்தார். ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் விளையாடாமல் வெளியில் அமர்ந்துள்ளதால் நிச்சயம் மூன்றாவது போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அஷ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement