அவரால் முடியும்போது என்னால் மட்டும் ஏன் முடியாது. உ.கோ டி20 இடம் குறித்து அஷ்வின் – பேட்டி

அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகியுள்ள நிலையில் இந்திய அணியும் தனது டி20 வீரர்களை தற்போது தேர்வுசெய்து விளையாடி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

ashwin

அப்படி உறுதியாகியுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பாஸ்ட் பவுலர் இடம் மட்டுமே காலியாக உள்ளது என்று கோலி தெளிவாக கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணியிலிருந்து கலந்து கடந்த சில ஆண்டுகளாகவே டி20 மற்றும் ஒருநாள் அணியில் ஓரங்கட்டப்பட்ட அஸ்வின் தற்போது தனது டி20 இடம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

நான் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்கும் நம்பிக்கையில் இருக்கிறேன் எனக்கு கிரிக்கெட் ஆடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும். ஆனால் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது எனக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. என்னால் வெளியில் அமர்ந்து டிவியில் கிரிக்கெட் பார்க்க முடியாது களத்தில் இறங்கி ஆட விரும்புகிறேன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் அணியில் இடம் பிடிக்கும் நம்பிக்கை எனக்கு உள்ளது ஏனெனில் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில், 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் யுவராஜ் கம்பேக் கொடுத்தார். அவரால் எப்படி தன்னம்பிக்கையோடு அணியில் இடம் பெற முடிந்ததோ அதனைப் போன்றே என்னுடைய திறமையை வெளிப்படுத்தி நான் அணியில் இடம் பிடிப்பேன் என்று அஷ்வின் கூறினார்.

- Advertisement -