டெஸ்ட்ல இருந்து ரிட்டயர்டு ஆன அன்னைக்கு நைட்டு தோனி என்ன பண்ணார் தெரியுமா? – அஷ்வின் தகவல்

Dhoni
Advertisement

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் இந்திய அணி மூன்று விதமான ஐசிசி தொடர்களையும் கைப்பற்றியிருந்தது. அந்த அளவிற்கு தனது அபாரமான கேப்டன்சி-யின் மூலம் இந்திய அணியை பல ஆண்டுகாலம் வழிநடத்தியவர் தோனி. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டுவரை விளையாடி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தார்.

kohli dhoni

அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி திடீரென்று பாக்ஸிங் டே போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தனது கரியரில் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4876 ரன்களை குவித்துள்ளார். அதில் ஆறு சதங்களும், 33 அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -

இந்நிலையில் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அன்று இரவு அவர் என்ன செய்தார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்தவகையில் அஷ்வின் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற அந்த நாள் என்னுடைய ஞாபகத்தில் இன்றும் நன்றாக உள்ளது. 2014ஆம் ஆண்டு மெல்போர்ன் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க நானும் தோனியும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம்.

ashwin 1

ஆனாலும் இறுதியில் நாங்கள் அந்த போட்டியில் தோல்வி அடையவே அந்த ஸ்டம்புகளை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார். மேலும் அன்று மாலை நான், ரெய்னா. இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் தோனியின் அறையில் இருந்தோம். அன்று இரவு முழுவதும் தோனி தான் அணிந்திருந்த ஜெர்சியையை கழட்டாமல் இருந்தார். அது மட்டுமின்றி அந்த ஜெர்சியின் மீது சில கண்ணீர் துளிகளும் அவர் சிந்தி இருந்தார் என அஷ்வின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : செஞ்சூரியன் மைதானத்தில் நாங்கள் பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு இவர்களே காரணம் – கோலி மகிழ்ச்சி

அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே தோனியின் டெஸ்ட் ரிட்டயர்மென்ட் குறித்து பேசியிருந்த ரெய்னாவும் இதே விளக்கத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement