பும்ராவை இந்த சோதனையின் அடிப்படையில் தான் விளையாட வைக்க வேண்டும் – அஷ்வின் கருத்து

Ashwin and Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது இந்திய அணியானது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா துருப்பு சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பும்ராவை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடரின் போது ஐந்து போட்டிகளிலும் விளையாடிய அவர் கடைசி போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை வரை சென்று பல மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத சூழலை சந்தித்தார். எனவே இந்த இங்கிலாந்து தொடரில் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்போகிறோம் என்று நிர்வாகமும் அறிவித்துவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவை இந்த இங்கிலாந்து தொடரில் எவ்வாறு கையாள வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஆஸ்திரேலிய தொடரின் போது பும்ரா மெல்போர்ன் போட்டியின் போது தனக்கு உடல் சோர்வாக இருக்கிறது என்றும் என்னால் விளையாட முடியவில்லை என்றும் என்னிடம் கூறியிருந்தார். அதன் பிறகு அவரை கட்டாயப்படுத்தி அடுத்த சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்தோம். அதனால் கடைசி போட்டியின் போது அவர் காயத்தையும் சந்தித்தார்.

- Advertisement -

அதனால் இம்முறை அவரை நாம் பாதுகாப்புடன் கையாள வேண்டும் அதாவது எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் அவரது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் நாம் அவரை உடல் சோதனைக்கு உட்படுத்தி விட்டு அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அவருடைய பந்துவீச்சில் வேகம் குறைகிறதா, அல்லது அவர் சோர்வாக இருக்கிறாரா?, பந்து வீச ஓடிவரும்போது வேகம் இல்லையா? என்பதை பரிசோதித்து விட்டே அவரை விளையாட வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : 102 ரன்ஸ்.. ஜீரோ டூ ஹீரோ.. ஆஸியை ஆட்டிப் பார்க்கும் மார்க்ரம்… டக் அவுட்டாகி சதமடித்து உலக சாதனை சமன்

ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடினாலும் அடுத்த போட்டிக்கு முன்னதாக அவர் சோர்வாக இருக்கிறாரா? அவரது உடற்தகுதி அடுத்த போட்டியிலும் விளையாட ஒத்துழைக்குமா? என்பதை அவரிடம் கேட்பது மட்டும் இன்றி அறிவியல் பூர்வமாகவும் அறிந்து அந்த உடற்தகுதியை கணக்கில் கொண்டே விளையாட வைக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement