நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் ஆட்டம் பிப்ரவரி 19-ஆம் தேதி கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து முதல் போட்டியிலேயே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது அந்த அணியின் ரசிகர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபர் அசாம் விளையாடுவதை பாத்தா வருத்தமா இருக்கு : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு தூணாக பார்க்கப்படும் பாபர் அசாம் முதல் போட்டியில் 90 பந்துகளை சந்தித்து 64 ரன்கள் அடித்தாலும் அவரது ஆட்டம் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஏனெனில் 321 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை துரத்தும் போது அவர் மிகவும் பொறுமையாக விளையாடியது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணிகள் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகன் நான். ஆனால் தங்களுடைய பெயரை காப்பாற்ற வேண்டும் என்று இதுபோன்று பொறுமையான ஆட்டத்தை விளையாடுவதில் தான் பிரச்சனையே துவங்குகிறது.
அணியின் நலனை விட உங்கள் பெயர் ஒன்றும் பெரிது கிடையாது. பாபர் அசாம் விளையாடிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் கொடுமையாக இருந்தது. ஏனெனில் ரன் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் விளையாடவில்லை. அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கவில்லை.
அவர் விளையாடிய விதத்தை பார்க்கும்போது அவரிடம் ரன் ஸ்கோரிங் ஷாட்களே இல்லாத போன்று இருந்தது. இப்படி ஒரு ஆட்டத்தை நான் கடந்த பல ஆண்டுகளாக பார்த்ததே இல்லை. முதல் 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் தான் அடிக்கிறீர்கள் என்றால் அது என்ன ஆட்டம் என்பதும் புரியவில்லை. பாபர் அசாம் தொடர்ந்து டாட் பால் விளையாடியிருக்கிறார் அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
இதையும் படிங்க : தோல்வியை சந்தித்தது மாட்டுமில்லாமல் தண்டனையையும் பெற்ற பாகிஸ்தான் அணி – விவரம் இதோ
அவர் நிச்சயம் ஃபார்மில் இல்லை என்பது அதன் மூலம் தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெகு சில போட்டிகளே இருக்கும் வேளையில் அவர் இப்படி விளையாடுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



