ஆஸ்திரேலிய அணியின் இவரை அவுட் ஆக்கிட்டா போதும். பேட்டிங் அஸ்திவாரமே இவர்தான் – அஷ்வின் பேட்டி

Ashwin-3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-1 என்ற நிலையில் சமநிலையை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே குவிக்க அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ரஹானேவின் சதத்தினாலும், ஜடேஜாவின் அரை சதத்தினாலும் 326 ரன்கள் குவித்தது.

Gill

- Advertisement -

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் கில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ரஹானே 27 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் இந்த வெற்றியை அவர் தனது அணி வீரர்களிடம் மட்டுமின்றி ட்விட்டர் பக்கத்திலும் பெரிதாக கொண்டாடி இருந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த காரணம் என்ன என்று பேட்டி ஒன்றினை அளித்துள்ள அஷ்வின் இந்த வெற்றி குறித்து கூறுகையில் :

ashwin 1

ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடும் போது ஸ்டீவ் ஸ்மித்தை தான் முதலில் ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்தான் அந்த அணியின் பேட்டிங் அஸ்திவாரம் அவரை வீழ்த்தி விட்டால் அவர்களை எளிதாக ஆல்அவுட் செய்ய முடியும். எனவே அவரை வீழ்த்தும் திட்டம் எங்களிடம் இருந்தது அதன்படி செயல்படுவோம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள ஸ்மித் மொத்தம் 10 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் இரு முறை அவர் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement