கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் 2 பேரும் போடுறது தப்பு கணக்கு.. சுட்டிக்காட்டிய ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

Ravichandran Ashwin
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடியது.

இந்திய அணி தப்பு கணக்கு போடுகிறது : அஷ்வின் கருத்து

இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியிருந்த வேளையில் அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் விளையாடியது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டும் விளையாடுவதால் இந்திய அணிக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த முடிவு பாதகமாக அமையும் என்று பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த தவறு குறித்த சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருமே இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

அதனால் தான் ஆல்ரவுண்டர்களை அதிகமாக பிளேயிங் லெவனில் விளையாட வைக்கின்றனர். 2026 டி20 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை இந்தியாவில் இரவில் தான் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதனால் இந்திய அணியில் பும்ராவுடன் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

இதையும் படிங்க : 59 ரன்ஸ்.. ஹாங்காங்கிற்கு எதிராக அவமானத்தை உடைத்த வங்கதேசம் வெற்றி.. லிட்டன் தான் 2016க்குப்பின் சாதனை

இல்லையெனில் இந்தியாவிற்கு அது பாதகமாகவே அமையும். எனவே சரியான இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற வேண்டியது அவசியம் என ரவிச்சந்திரன் அஸ்வின் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement