தோணியை ஓரம்கட்டிய அஸ்வின்…தோனியிடம் கற்ற வித்தையை தோனியிடமே காட்டிய அஸ்வின் – விவரம் உள்ளே

Ashwin
- Advertisement -

ஐபிஎல் சீசன்களில் இதுவரையிலும் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிவந்த அஸ்வின் இந்த ஐபிஎல்-இல் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இரண்டாண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளை பிராவோ மற்றும் பில்லிங்ஸின் அபாரமான ஆட்டத்தால் துவம்சம் செய்து கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றியை ருசிபார்த்தது.

dhoni

- Advertisement -

ஆனால் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் தோனியில் பாட்சா பலிக்கவில்லை எனலாம்.சென்னை – பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் தோனியை விடவும் அஸ்வினின் கேப்டன் அனைவரையும் சபாஷ் போடவைத்தது எனலாம்.சென்னை அணிக்கு எதிராக அஸ்வின் அமைத்த வியூகத்தில் சிக்கி சென்னை அணி தனது வெற்றியை இழந்தது என்றே சொல்லலாம்.

கடந்த இரண்டுபோட்டிகளில் கெயிலை களமிறக்காமல் வைத்திருந்த பஞ்சாப் அணி சென்னைக்கு எதிரான போட்டியின்போது அதிரடி ஆட்டக்காரரான கெயிலை களமிறக்கியது.சென்னை அணியினரின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கிய கெயில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

ashwin1

33 பந்துகளில் 7பவுண்டரிகள் மற்றும் 4சிக்ஸர்கள் உட்பட 63 ரன்களை விளாசி தள்ளினார்.மறுபக்கம் கே.எல்.ராகுல் 22பந்துகளில் 37 ரன்களை எடுக்க பின்னர் வந்த வீரர்களும் சீராக விளையாடிட பஞ்சாப் அணி 20ஓவர்களின் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது.ஹர்பஜன்சிங்கை வைத்து கெயிலை அவுட்டாகி விடலாம் என்ற தோனியின் கனவை உடைத்தெறிந்து சுழற்பந்து வீச்சை கவனமாக எதிர்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் கெயில்.

- Advertisement -

பின்னர் 20 ஓவர்களில் 198 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செளமிறங்கிய சென்னை அணியின் பேட்டிங் லைனை உடைக்கவும் அஸ்வின் புது வியூகம் அமைத்து வைத்திருந்தார்.வழக்கமாக கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் பவர்ப்ளே ஓவர்களின் போது சுழற்பந்துவீச்சை பயன்படுத்திய அஸ்வின் சென்னை அணிக்கு எதிராக மோகித் சர்மாவையும்,ஆன்ட்ரூ டை ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கினார்.

yuvi

அஸ்வினின் புது வியூகத்திற்கு கைமேல் பலனும் கிடைத்தது. இதனால் முதல் ஐந்து ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் மட்டுமே எடுத்தது. பத்து ஓவர்களுக்கு பின்னர் அஸ்வின் மற்றும் முஸ்தபீர் பந்துவீசி சென்னை அணியின் ரன்களை கட்டுப்படுத்திட அசத்தலான வெற்றியை பெற்றது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி.முன்னதாக சென்னை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பிருந்தும் தோனியின் தவறான முடிவால் தோற்றது என ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்.

ஜடேஜாவிற்கு பதிலாக பிராவோவை களமிறக்கியிருந்தால் சென்னை அணி பிராவோவின் அதிரடியால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ணம்.எது எப்படியோ கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வின் சென்னைக்கு எதிரான போட்டியின்போது செயல்பட்ட விதமும், கேப்டன்ஷிப்பும் தோனியின் திறமைகளையே தூக்கி சாப்ட்டுவிட்டது எனலாம்.

Advertisement