உனக்கான நேரம் வரும் வரை காத்திரு. இளம் வீரருக்காக வருந்திய – ரவிசந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பந்து வீச்சு பலம் அனைவரும் வியக்கும் விதமாக இருந்து வருகிறது. சமீப காலமாகவே நமது அணியில் மிகவும் அதிகமாக பவுலர்கள் இருந்து வருவதை நாம் கண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக அணியில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதனால் பல இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

IND

- Advertisement -

அந்த வகையில் நீண்ட நாட்களாக சிறப்பாக செயல்பட்டாலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் வீரர்களில் ஒருவர் ஜெய்தேவ் உனட்கட். 30 வயதான இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 2013-ம் ஆண்டு 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இன்றளவும் நிரந்தர இடம் இன்றி தவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனக்கு ஆஸ்திரேலிய தொடரின் போது அனுப்பிய ஒரு மெசேஜ் குறித்து தற்போது அவரது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Unadkat

கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ரிசர்வ் பவுலர்களாக பல வீரர்கள் சென்றனர். ஆனால் அப்போது கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அந்த தொடரில் பலருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சூழலில் தான் அஸ்வின் எனக்கு மெசேஜ் செய்து இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : பிட்டே இல்லாத இவரை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மாற்றக்கூடாது – சபா கரீம் ஓபன்டாக்

அப்போது அதில் : உனக்காக நான் வருத்தப்படுகிறேன். ரஞ்சி தொடரில் நீ சிறப்பாக செயல்பட்டு இருந்தாய். உன்னுடைய கேம் மற்றும் சிந்தனையில் தெளிவாக இரு. உனக்கான நேரம் வரும் என்று அவர் மெசேஜ் அனுப்பி இருந்ததாக பகிர்ந்துள்ளார். அவரது இந்தக் கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement