அவரை மாதிரி ஒரு பேட்ஸ்மேன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. அவரை ஆர்.சி.பி விடக்கூடாது – அஷ்வின் கருத்து

Ashwin
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதால் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளையும் தற்போதே ஐ.பி.எல் நிர்வாகம் மும்முரப்படுத்தி உள்ளது.

ஆர்.சி.பி அணி தக்கவைக்க வேண்டிய வீரர் :

அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் கூறியுள்ளது. அது தவிர்த்து ஏலத்திற்கான பல்வேறு விதிமுறைகளையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம்? என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைக்கலாம்? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் பேசி வருகின்றனர். அந்தவகையில் தமிழக ரவிச்சந்திரன் அஸ்வின் பெங்களூரு அணி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்சிபி அணியை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஏழு முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு கூட சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இதனால் அந்த அணியில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அதே போன்று தினேஷ் கார்த்திக் பயிற்சியாளராக மாறியுள்ளதால் அவருக்கான மாற்று வீரரை மட்டும் சரியாக வாங்க வேண்டும். மற்றபடி தற்போது பெங்களூரு அணி மிகச் சிறப்பான அணியாகவே இருக்கிறது. அதேபோல் ரஜத் பட்டிதாரை அந்த அணி தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சர்பராஸ் கானுக்கு அநியாயம் ஒன்னும் நடந்துடல.. அந்த வாய்ப்பு கிடைக்கும்.. முன்னாள் செலக்டர் பரஞ்சபே பேட்டி

ஏனெனில் அவர் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் 10 கோடிக்கு மேல் செல்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில் மிடில் ஆர்டரில் விளையாடும் இந்திய வீரர்கள் தற்போது குறைவாகவே இருக்கிறார்கள். கே.எல் ராகுல், துருவ் ஜுரேல், ரஜத் பட்டிதார், ராகுல் திரிப்பாதி, சரிபராஸ் கான் போன்ற ஒரு சில வீரர்களே மிடில் விளையாடி வருகின்றனர். எனவே என்னை பொறுத்தவரை ஆர்.சி.பி அணி ரஜத் பட்டிதாரை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement