சர்பராஸ் கானுக்கு அநியாயம் ஒன்னும் நடந்துடல.. அந்த வாய்ப்பு கிடைக்கும்.. முன்னாள் செலக்டர் பரஞ்சபே பேட்டி

Jatin Paranjape 2
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் மிகுந்த போராட்டத்திற்கு பின் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். கடந்த சில வருடங்களாக ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வந்த அவருக்கு புஜாரா, ரகானே போன்ற சீனியர்கள் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்ட அவர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளித்தது.

அதன் பின் கடந்த இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுல் காயத்தை சந்தித்ததால் அவருக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் தனது முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்த சர்பராஸ் கான் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அடுத்ததாக நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் காயத்திலிருந்து வந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

சர்பராஸ் கான் வாய்ப்பு:

மறுபுறம் 2024 இராணிக் கோப்பையில் இரட்டை சதமடித்த சர்பராஸ் கான் மும்பை சாம்பியன் பட்டம் உதவினார். அதனால் அவருக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கொடுக்காதது நியாயமற்றது என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் மற்றும் சில ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் சர்பராஸ் கானுக்கு அநியாயம் எதுவும் நடக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ஜத்தின் பரஞ்சபே தெரிவித்துள்ளார்.

மேலும் நவம்பர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் சூழ்நிலையில் எந்த அநியாயமும் கிடையாது. அவர் மற்றொரு வீரர் காயத்தை சந்தித்ததால் வாய்ப்பு பெற்று விளையாடினார். இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது”

- Advertisement -

ஆஸ்திரேலிய வாய்ப்பு:

“அதனால் யாரோ ஒருவர் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் காயத்தால் வாய்ப்பை இழந்த மற்றொரு வீரர் என்ன செய்வது? எனவே இராணி கோப்பை போல சர்பராஸ் கான் தொடர்ந்து ரன்கள் அடித்து தன்னுடைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றை உச்சமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்தாலே வாய்ப்புகள் தாமாக வரும்”

இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை: 203 ரன்ஸ்.. புஜாரா அணியை சுருட்டிய தமிழ்நாடு.. சாய் கிஷோர் அசத்தல்.. முதல் நாளிலேயே அபாரம்

“குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் அவரும் ரிசர்வ் வீரராக இருப்பார் என்று நான் கருதுகிறேன். ஆனால் களத்தில் உங்களால் 11 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அதற்காக சர்பராஸ் கான் அதற்கு தகுதியானவர் அல்ல என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்திய அணியில் தற்சமயத்தில் நிறைய போட்டி இருப்பதே அதற்குக் காரணமாகும்” என்று கூறினார்.

Advertisement