கேமரூன் கிரீனை விட சி.எஸ்.கே அணி அந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை தேர்வு செய்தால் நல்லா இருக்கும் – அஷ்வின் கருத்து

Ashwin and CSK
- Advertisement -

எதிர்வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டன.

சி.எஸ்.கே அணி அந்த வீரரை டார்கெட் செய்யனும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

அந்த வகையில் வெளியான பட்டியலில் பல சுவாரஸ்யமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எதிர்வரும் இந்த 2026 மினி ஏலத்தில் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் அணியான சிஎஸ்கே-விடம் 43.4 கோடி ரூபாயும், மூன்று முறை சாம்பியனான கே.கே.ஆர் அணியிடம் 64.3 கோடி ரூபாயும் இருப்பதனால் இவ்விரு அணிகளும் மினி ஏலத்தின் போது வீரர்களை தேர்வு செய்வதில் பலமான போட்டியை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சி.எஸ்.கே அணி தங்களது அணியில் பினிஷராகவும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் கேமரூன் கிரீனை விட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசலை தேர்வு செய்து தங்களது அணிக்குள் கொண்டுவர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான அஸ்வின் தனது யோசனையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : 2026 ஐ.பி.எல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கே.கே.ஆர் அணி இருக்கும். எனக்கு தெரிந்து சி.எஸ்.ல் அணி கேமரூன் கிரீனை விட கே.கே.ஆர் அணியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரே ரசல் சி.எஸ்.கே அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று நான் நினைக்கிறன்.

- Advertisement -

ஏனெனில் கேமரூன் கிரீன் பினிஷிங் வீரராக சி.எஸ்.கே அணியில் விளையாட முடியாது. அதே வேளையில் ஆண்ட்ரே ரசல் பினிஷராக விளையாடுவது மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிஎஸ்கே அணிக்கு பயனுள்ள வீரராக இருப்பார். எனவே கேமரூன் கிரீன் விலையை சிஎஸ்கே அணி ஏலத்தில் ஏற்றிவிட வேண்டும்.

இதையும் படிங்க : 19 வயதிலிருந்து பாத்ததை பாழாக்கி.. இந்திய அணியை இப்படியா தப்பா வளர்ப்பீங்க? கம்பீரை விளாசிய கும்ப்ளே

அப்படி நடந்தால் தான் சென்னை அணியால் ஆண்ட்ரே ரசலுக்கு முழுவீச்சில் செல்ல முடியும் சேப்பாக்கத்தில் இருக்கும் சூழலுக்கு பினிஷிங் வீரராக ஆண்ட்ரே ரசல் சிறந்த தேர்வாக இருப்பார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement