19 வயதிலிருந்து பாத்ததை பாழாக்கி.. இந்திய அணியை இப்படியா தப்பா வளர்ப்பீங்க? கம்பீரை விளாசிய கும்ப்ளே

Anil Kumble
- Advertisement -

கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றது. அந்த தோல்விக்கு கொல்கத்தா பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

இத்தனைக்கும் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்திக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்களே காரணமானது. ஆனால் அந்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு இப்படிப்பட்ட பிட்ச்சை தாங்கள் தான் கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

- Advertisement -

பாழான கொல்கத்தா பிட்ச்:

இருப்பினும் சவாலான கொல்கத்தா பிட்ச்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடத் தவறியது தோல்வியைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 19 வயதிலிருந்து தமக்குத் தெரிந்த கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் பிட்ச் இப்போட்டியில் பாழாக்கப்பட்டுள்ளதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும் இளம் அணியை இது போன்ற பிட்ச்களில் விளையாட வைத்து வளர்ப்பது இந்தியாவுக்கு நல்ல வருங்காலத்தைக் கொடுக்காது என்றும் அவர் கம்பீரை சாடியுள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் மரபை நீங்கள் திரும்பிப் பார்த்தால் இங்கே நிறைய டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது. இங்கே நான் 19 வயதுக்கு முன்பிலிருந்தே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடியும் அளவுக்கு கொல்கத்தா பிட்ச் எப்போதும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதில்லை”

- Advertisement -

கும்ப்ளே விமர்சனம்:

“இப்படிப்பட்ட பிட்ச் தான் வேண்டும் என்று கேட்டதாக கௌதம் கம்பீர் சொன்னதை நானும் கேட்டேன். ஆனால் அதைக் கேட்ட எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஏனெனில் நீங்கள் ஒரு இளம் அணியை வளர்க்க விரும்புகிறீர்கள். இங்கிலாந்தில் நல்ல பிட்ச்களில் நம்முடைய இளம் அணி சிறப்பாக போராடி 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் விளையாடும் அவர்களுக்கு அணி நிர்வாகம் அதே போன்ற சூழ்நிலைகளைக் கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்”

இதையும் படிங்க: விராட், ரோஹித் இல்லன்னு சொல்விங்களா? இளம் அணியை தோற்க வைத்ததை ஜீரணிக்க முடியல.. புஜாரா விளாசல்

“நீங்கள் இளம் அணிக்கு ரன்கள் அடிப்பதற்கான தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கும் தன்னம்பிக்கையைப் பெற வேண்டும். பவுலர்களுக்கு சூழ்நிலைகள் சவாலாக இருக்க வேண்டும். அப்போது தான் விக்கெட்டுகள் வரும். நம்முடைய பவுலர்கள் திறமையானவர்கள்” என்று கூறினார்.

Advertisement