தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் பின்தங்கியுள்ளது. அந்த தோல்விக்கு கொல்கத்தா பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலாக இருந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இத்தனைக்கும் கடந்த 2024 நியூசிலாந்து தொடரில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஒரு தலைப்பட்சமான பிட்ச்களே இந்தியாவின் ஒய்ட்வாஸ் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. ஆனால் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் இப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
ஜீரணிக்க முடியல:
இருப்பினும் சவாலான பிட்ச்சில் நன்றாக பேட்டிங் செய்யத் தவறியது தோல்விக்கு காரணமானதாகவும் கம்பீர் தெரிவித்தது ரசிகர்களை கடுப்பேற்றியது. இதற்கிடையே விராட், ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர்கள் ஓய்வுக்குப் பின் சுப்மன் கில் தலைமையில் புதிய இளம் இந்திய அணி உருவாக்கி வருகிறது. அதனால் இளம் அணி அனுபவமின்மையால் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது பரவாயில்லை என்ற பேச்சுக்களும் காணப்படுகின்றன.
இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற சீனியர்கள் இல்லாததால் இந்தியா தோற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புஜாரா விமர்சித்துள்ளார். மேலும் திறமையான இளம் வீரர்களை மோசமான பிட்ச்சில் விளையாட வைத்ததால் கிடைத்த இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் கம்பீரை சாடியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
புஜாரா விளாசல்:
“இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அணி அடுத்த தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்வதால் இந்த தோல்வி கிடைத்தது என்று சொல்வதை ஜீரணிக்க முடியாது. அடுத்த தலைமுறையில் அடியெடுத்து வைப்பதால் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தோற்றது என்று சொன்னால் அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் உள்ளூரில் நமது அணி வீரர்கள் கொண்டுள்ள ரெக்கார்டை பாருங்கள்”
இதையும் படிங்க: தவறு பிட்ச், வீரர்கள் மேலே இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு பணத்துக்காக மாறியதே காரணம்.. பீட்டர்சன் கவலை
“ஜெய்ஸ்வால், ராகுல், சுந்தர், கில் ஆகியோருடைய ரெக்கார்டை பாருங்கள். அது நன்றாக இருந்தும் நாம் இந்தியாவில் தோற்க்கிறோம் என்றால் ஏதோ தவறாக இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை இந்திய அணி இப்போட்டியை நல்ல பிட்ச்சில் விளையாடியிருந்தால் வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கும். இது போன்ற பிட்ச்களில் விளையாடினால் உங்களுக்கு சொந்த மண்ணில் விளையாடும் சாதகமே கிடைக்காது. எதிரணி உங்களுக்கு சமமாகி விடுவார்கள்” என்று கூறினார்.



