தவறு பிட்ச், வீரர்கள் மேலே இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு பணத்துக்காக மாறியதே காரணம்.. பீட்டர்சன் கவலை

Kevin Pieterson
- Advertisement -

கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தங்களது சொந்த மண்ணில் இந்தியா 15 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனைக்கும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சுகளே முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

வீரர்கள், பிட்ச் காரணமில்லை:

அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் கொல்கத்தாவில் இது போன்ற பிட்ச்சை அமைக்க வேண்டுமென கேட்டதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடத் தவறியதே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் இந்தியாவின் தோல்விக்கு பிட்ச் அல்லது வீரர்கள் காரணம் இல்லை என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

மாறாக டி20 கிரிக்கெட்டின் வருகையால் தற்போதுள்ள பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் விளையாடி ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டதே காரணம் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். பணத்துக்காக தற்போதைய கிரிக்கெட்டின் அடிப்படை மாறியுள்ளது பற்றி அவர் ட்விட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கே எனது பேச்சைக் கொஞ்சம் கவனியுங்கள்”

- Advertisement -

பீட்டர்சன் ஆதங்கம்:

“கொல்கத்தாவில் பிட்ச்சை பார்த்து ஸ்கோர் அடித்து முடிவை காண்பது, பேட்ஸ்மேன்களின் நவீன டெக்னிக்கை மட்டுமே கீழே போடும். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் மற்றும் ஸ்விட்ச் ஹிட் ஆகியவற்றை அடிக்கும் நோக்கத்தில் வளர்ந்துள்ளார்கள். மாறாக அவர்கள் கடினமான சூழ்நிலைகளில் தாக்கு பிடிக்கும் கலையைக் கற்று, இன்னிங்ஸை கட்டமைக்கும் நோக்கத்தில் வளரவில்லை”

இதையும் படிங்க: 132க்கு அவுட்.. தெ.ஆவை சுருட்டி வீசிய இளம் இந்தியா.. ருதுராஜ் அடுத்தடுத்து நாயகனாகி பதிலடி

“எனவே வீரர்களை குறை சொல்லக்கூடாது. தற்போது கிரிக்கெட் என்பது, சுழலும் பந்துகளை எப்படி எதிர்கொள்வது அல்லது சுழல் பந்துகளுக்கு எதிராக எப்படி தாக்குப்பிடிப்பது என்பதைப் பற்றியது கிடையாது. மாறாக இப்போதெல்லாம் கிரிக்கெட் என்பது வெளிச்சமான விளக்குகள், சத்தமான இசை, கிரிக்கெட்டை நடத்தும் வாரியங்களுக்கு கை நிறைய பணம், தனியார் உரிமம் ஆகியவற்றை பற்றியதாக மாறி விட்டது” என்று கவலைத் தெரிவித்துள்ளார்.

Advertisement