132க்கு அவுட்.. தெ.ஆவை சுருட்டி வீசிய இளம் இந்தியா.. ருதுராஜ் அடுத்தடுத்து நாயகனாகி பதிலடி

Ruturaj Gaikwad
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் இந்தியா ஏ அணி சமன் செய்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணி வென்றது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது.

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அபாரமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் 30.3 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினார்கள்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

தென் ஆப்பிரிக்காவுக்கு ஜோர்டான் ஹெர்மன் 4, கேப்டன் ஆக்கர்மேன் 7, கிஷ்லே 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதிகபட்சமாக ரிவால்டோ மூன்சாமி 33, டிரே பிரிட்டோரியஸ் 21, டிலானோ பாட்கிட்டர் 13, டயன் பாரஸ்டர் 22 ரன்கள் எடுத்தார்கள். மறுபுறம் தெனாப்பிரிக்கா அணியை பந்து வீச்சில் ஊதித் தள்ளிய இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2, ஹர்ஷித் ராணா 3, நிசாந்த் சிந்து 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்ததாக 133 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்புறம் 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 6 பவுண்டரியுடன் 32 (22) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் திலக் வர்மா நிதானமாக விளையாடி 29* (62) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ருதுராஜ் அடுத்தடுத்த ஆட்டநாயகன்:

எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ருதுராஜ் அரை சதத்தை அடித்து 9 பவுண்டரியுடன் 68* (83) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 27.5 ஓவரிலேயே 135/1 ரன்களை எடுத்த இந்தியா ஏ அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் 2 – 0* (3) என்ற கணக்கில் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே தெனாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா ஏ அணி இத்தொடரின் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க: கம்பீர் பாடத்தை கத்துகிட்டு இனியாச்சும்.. இந்தியாவின் வெற்றிக்கு இந்த அப்ரோச்சை மாத்தனும்.. கங்குலி அட்வைஸ்

இந்த வெற்றிக்கு 68* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்தப் போட்டியில் சதத்தை அடித்து இந்தியா ஏ அணியை வெற்றி பெற வைத்த அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். தற்போது இதையும் சேர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகனாகி அசத்தியுள்ள அவர் தமக்கு எந்த இந்திய அணியிலும் வாய்ப்பளிக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கும் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement