அணியின் வெற்றிக்காக பேடை கழட்டி எறிந்த அஸ்வின் – வைரல் வீடியோ

Ashwin

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டக் அலி கோப்பை தொடர், கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கிரிக்கெட் அணி செயல்பட்டுவருகிறது.

Ashwin

 இந்த அணிகள் அனைத்தும் வருடம் முழுவதும் முதல் தர போட்டி, 50  ஓவர் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி என அனைத்திலும் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.  வழக்கமாக நவம்பர் மாதங்களில் 20 ஓவர் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெறும்.

- Advertisement -

 இந்த கோப்பை தொடரில் பல அணிகளுடன் முட்டிமோதி கர்நாடக அணியும் தமிழக அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் விளாசினார்.

Ashwin 1

 பின்னர் ஆடிய தமிழக அணி இலக்கை நோக்கி வெகு வேகமாக முன்னேறியது. முதலில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தாலும் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியை தூக்கி நிறுத்தினர்.

- Advertisement -

 இப்படியே ஒரு புறமாக செல்ல இறுதியாக கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.  அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா அபாரஜித்சித் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

 அஸ்வின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிகளை விளாசினார். பின்னர் வித்தியாசமாக யோசனை செய்து காலில்  ‘பேட்’ அணிந்து இருந்தால் வேகமாக ஓட முடியாது என்று கருதி அதனை அகற்றி விட்டு ரன் ஓடினார் அஸ்வின்.

Ashwin

 அதனை அகற்றி விட்டு அடுத்து ஒரு சில ரன்கள் ஓடினார். இது பார்ப்பதற்கு புதிதாக இருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் வரும் காலங்களில் இதனை இந்த யுக்தியை பயன்படுத்துவார்கள் என்றே தெரிகிறது. கிரிக்கெட் விதிமுறைகளின்படி இதனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்த குறிப்பிட்ட வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Advertisement