100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஷ்வினுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அளித்த மரியாதை – நெகிழ்ச்சி சம்பவம்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரினை ஏற்கனவே இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி இன்று தரம்சாலா நகரில் சற்று முன்னர் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது அந்த அணி தங்களது முதலில் தங்களது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணி சார்பாக நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14-வது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பெருமையை பெற்றுள்ளார்.

இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்டுகளையும், 3309 ரன்களையும் விளாசியுள்ள அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் கேப்பினை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி பிரீத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் அந்த பரிசளிப்பு விழாவிற்கு பிறகு தனது குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஸ்வின் மைதானத்திற்கு களமிறங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் செய்த மரியாதை நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. அந்த வகையில் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அணி வீரர்கள் இருபுறமும் அரணமைத்து அஸ்வினை வரவேற்று மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க : அஸ்வினின் 100வது போட்டியில் நம்ப முடியாத மாற்றத்தை செய்த ரோஹித்.. இந்திய பிளேயிங் லெவனில் ஏற்பட்ட 2 மாற்றம்

மேலும் அஸ்வின் முதல் ஆளாக மைதானத்திற்கு செல்ல பின்னால் இந்திய வீரர்கள் சென்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அஸ்வினுக்கு வழங்கிய இந்த மரியாதை பலரது மத்தியிலும் நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement