அஸ்வினின் 100வது போட்டியில் நம்ப முடியாத மாற்றத்தை செய்த ரோஹித்.. இந்திய பிளேயிங் லெவனில் ஏற்பட்ட 2 மாற்றம்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதனால் ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் 12 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

ஆனால் அதிரடியாக விளையாடி வெற்றி பெறுவோம் என்று சொன்ன இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் சம்பிரதாயக் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் துவங்கியது.

- Advertisement -

இந்திய அணி:
அதில் ஆறுதல் வெற்றி பெற்று இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் ரஜத் படிடார் நேற்று மாலை வலைப்பயிற்சி செய்த போது திடீரென்று காயத்தை சந்தித்ததாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதனால் அவருக்கு பதிலாக தேவ்தூத் படிக்கல் அறிமுகமாக களமிறங்குவதாகவும் ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்த தொடரில் அறிமுகமாகி கடந்த 3 போட்டிகளில் முழுமையான வாய்ப்பு பெற்று விளையாடிய ரஜத் படிடார் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் இப்போட்டியில் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் காயமடைந்து வெளியேறியுள்ளதாக ரோகித் சர்மா கூறுவதை ரசிகர்கள் யாரும் நம்பவில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

சொல்லப்போனால் வழக்கம் போல காயம் என்ற பெயரில் சுமாராக செயல்பட்ட வீரரை நீக்கியுள்ளதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். அதே போல கடந்த போட்டியில் ஓய்வெடுத்த பும்ரா மீண்டும் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதனால் கடந்த போட்டியில் அறிமுகமாகி அசத்திய ஆகாஷ் தீப் இந்த போட்டியில் பெஞ்சில் அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதையும் படிங்க: 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டை வீழ்த்தாமல் போனாலும் மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – ரவிச்சந்திரன் அஷ்வின்

மற்றபடி 100வது போட்டியில் விளையாடி சாதனை படைக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட ரோகித் சர்மா தலைமையில் கடந்த போட்டியில் விளையாடிய அதே இந்திய வீரர்கள் இந்த போட்டியிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், தேவ்தூத் படிக்கல், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Advertisement