சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியே அமர இவரே காரணம். அவருக்கும் எனக்கும் சிக்கல் இருந்தது – அஷ்வின் வருத்தம்

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் அஸ்வின். இவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008ஆம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை ஆடியவர். அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை கைவிட்டது. இதன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சென்றார்.

ipl

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ரவிச்சந்திரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை அவமானப்படுத்தியதாக ஒரு சில விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் கிரிக்கெட் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது எனது முகத்தில் அடித்தது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய போது முதல் தர போட்டியில் பந்து வீசுவதை விட டி20 போட்டியில் எளிதாக பந்துவீசி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்காக எனக்கு சரியான பாடம் கிடைத்தது. 2010ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 14, 16, 18, 20 ஓவர்கள் பந்துவீசினேன். அப்போது ராபின் உத்தப்பா மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் எனக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டனர்.

மேலும் இந்த ஓவர்களை வீசினால் நமக்கு விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தேன். மாறாக 45 ரன்கள் விட்டுக் கொடுத்து அதன் விளைவாக நாங்கள் தோற்றுவிட்டோம். அடுத்த போட்டியிலும் சூப்பர் ஓவருக்கு சென்று தோல்வியை சந்தித்தோம். இதன் காரணமாக அடுத்த போட்டியில் என்னை அணியில் இருந்து நீக்கினார்கள்.

- Advertisement -

உடனடியாக நான் ஹோட்டல் ரூமை காலி செய்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது ஏன் சென்னை அணி எனக்கு ஆதரவாக இல்லை என்பது குறித்து நிறைய யோசித்து விட்டேன்.

Ashwin

மேலும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் எனக்கும் சிறு பிரச்சனை இருந்தது. இதுதொடர்பாக அவர் என்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. அவர் மீது பெரிய மதிப்பும் வைத்திருந்தேன். ஆனால் அவர் பேசவே தயாராக இல்லை என்பது எனக்கு வருத்தம் அளித்தது இவ்வாறு கூறினார் ரவிசந்திரன் அஸ்வின்.

Advertisement