இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்கு முன்னதாக மினி ஏலத்தில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவித்த வீரர்களின் பட்டியலையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டது.
சி.எஸ்.கே அணி டார்கெட் செய்ய வாய்ப்புள்ள 2 வீரர்கள் : அஷ்வின் கணிப்பு
அப்படி வெளியான பட்டியலுக்கு பிறகு அதிக கையிருப்பு தொகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் இந்த மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளதால் சி.எஸ்.கே நிர்வாகம் எந்தெந்த வீரர்களை வாங்கும்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடித்த சி.எஸ்.கே அணி இம்முறை சரியான வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தும் நோக்கில் இந்த ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
மேலும் சி.எஸ்.கே அணி எந்தெந்த வீரர்களை வாங்க வாய்ப்புள்ளது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினும் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சி.எஸ்.கே நிர்வாகம் வாங்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்த மினி ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் உமேஷ் யாதவ் கூட அதிக தொகைக்கு ஏலம் போகலாம். மேலும் காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அவரை சென்னை அணி வாங்கினாலும் வாங்கலாம். ஆனால் அவரை பேக்கப் வீரராக வைக்கவே அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : அவர் பக்கத்துல கூட என்னால நிக்க முடியாது.. வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பின்னர் – மிட்சல் ஸ்டார்க் பேச்சு
மற்றபடி இந்த மினி ஏலத்தில் ஆண்ட்ரே ரசல் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் இல்லை என்பதனால் சி.எஸ்.கே அணி வெங்கடேஷ் ஐயரை வாங்க பெரியளவில் போட்டிக்கு செல்லும். மேலும் மேக்ஸ்வெல் இல்லாததால் லியாம் லிவிங்ஸ்டனை வாங்கவும் சி.எஸ்.கே அணி முயற்சிக்கும். இந்த இரண்டு வீரர்களை வாங்க சி.எஸ்.கே அணி பெரியளவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



