IND vs WI : அவரு டேலண்ட்டை நான் பாத்திருக்கேன். கண்டிப்பா பெரிய ஆளா வருவாரு – இளம்வீரரை ஆதரித்த அஷ்வின்

Ashwin-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது.

Ashwin

- Advertisement -

இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 16-வது வீரர் என்ற சாதனையும், இந்திய அளவில் அந்த சாதனையை செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டத்திற்கு பிறகு பேசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Yashasvi Jaiswal

அந்த வகையில் அஸ்வின் பேசியதாவது : இது ஒரு நல்ல செயல்பாடு என்று நினைக்கிறேன். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்த போதிலும் பந்து சுழல துவங்கியது. மேலும் ஏற்கனவே நான் டிவியில் பார்த்த போதும் பந்து நன்றாக திரும்பியது எனக்கு தெரிந்தது. எனவே ஒரு சில ஓவர்கள் சுதாரித்து அதன் பிறகு மைதானம் வறண்ட பின்னர் பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்ய வேகத்தை சரியாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசியதில் மகிழ்ச்சி. எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் என்பது வித்தியாசமான ஒன்று. இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு துடிப்பான வீரர். மிகவும் திறமையான அவர் நிச்சயம் அவரது கரியரில் பெரிய பெரிய விஷயங்களை செய்வார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : அணில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக வீரர் அஷ்வின் – விவரம் இதோ

அதேபோன்று அவரிடம் இருந்து சில சிறப்பான இன்னிங்க்ஸை இனி நாம் பார்க்க போகிறோம், அவர் மிகப்பெரிய வருவார் என்று அஸ்வின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனும் இந்திய அணிக்காக அறிமுகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement