IND vs WI : அணில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக வீரர் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin-and-Kumble
- Advertisement -

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 92 போட்டியில் பங்கேற்று 474 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வீரராக பார்க்கப்படும் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் அணித்தேர்வை விமர்சித்திருந்தனர்.

Ashwin-1

- Advertisement -

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ள அஸ்வின் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அதன்படி இன்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாடி வரும் அஸ்வின் போட்டியின் முதல் இன்னிங்ஸ் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அதன்படி இன்று துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் இந்திய அணி பந்து வீசியது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Ashwin

அதிலும் குறிப்பாக போட்டியின் முதல் விக்கெட்டாக தகநரைன் சந்திரபாலை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவை ஆரம்பித்தார். அவர் சந்திரபாலில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனை தகர்த்து முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அஸ்வின் படைத்த சாதனை யாதெனில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக வீரர்களை போல்ட் முறையில் ஆட்டோமிழக்கச் செய்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இதுவரைக்கும் 94 வீரர்களை அவர் போல்டு மூலம் ஆட்டமிழக்க வைத்து முதலிடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : அதுக்காக என்னோட அம்மா திட்டுனாங்க, வாழ்க்கைல அதை நான் பண்ணிருக்க கூடாது – ராகுல் டிராவிட் வருத்தம்

இவ்வேளையில் தற்போது சந்திரபாலை போல்டு மூலம் ஆட்டமிழக்க வைத்த அஸ்வின் மொத்தம் 95 வீரர்களை போல்டு முறையில் ஆட்டமிழக்க வைத்து அதிக விக்கெட்டுகளை போல்ட் முறையில் எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கபில் தேவ் 80 விக்கெட்டுகளுடன், முகமது சாமி 66 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement