தல தோனிக்கு நெருக்கமான வீரரான இவரே டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்க தகுதியானவர் – அஷ்வின் கருத்து

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட இடம் கிடைக்காதது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சாம்சனுக்கு ஆதரவாக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது ஆதரவு குரலினை கொடுத்து வரும் வேளையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் :

Sanju Samson

- Advertisement -

தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வேண்டியது அவசியம். அவர் தற்போது இருக்கும் பார்மில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அவர் கட்டாயம் இடம் பெற்று விளையாட வேண்டும் என்று தனது ஆதரவினை அளித்திருந்தார்.

அதோடு சஞ்சு சாம்சன் குறித்து பேசிய அஸ்வின் மேலும் கூடுதலாக டி20 கிரிக்கெட்டில் புதிய கேப்டனாக நியூசிலாந்து தொடரை திறம்பட செயல்பட்டு வெற்றி பெற்ற ஹார்டிக் பாண்டியா குறித்தும், அவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள பிணைப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : உண்மையிலேயே ஹார்டிக் பாண்டியா தல தோனிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

Hardik Pandya MS DHoni GT vs CSK

தோனியிடமிருந்து தான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டதாக ஏற்கனவே பாண்டியா பலமுறை கூறியிருக்கிறார். அதோடு தோனியிடம் கற்றுக் கொண்ட பல விடயங்களை அவர் போட்டியின் போதும் செயல்படுத்தி வெற்றியையும் கண்டுள்ளார். எப்பொழுதுமே அணியில் உள்ள சில பிரச்சனைகளை அவர் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் என ஹார்டிக் பாண்டியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சஞ்சு சாம்சன் விஷயத்தில் கூட ஒரு கேப்டனாக பாண்டியா மிகச் சிறப்பான பதிலை அளித்திருந்தார். அந்த வகையில் ஒரு கலவையான அணியை நாங்கள் உருவாக்கி விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்து தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அணியில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு வழங்க நாங்கள் சரியான முயற்சியை எடுப்போம் என்றும் பாண்டியா பதிலளித்திருந்தார்.

இதையும் படிங்க : தோனியிடம் இருந்து நாங்க கத்துக்கிட்டது இதுதான். 7 சிக்ஸர் அடித்து சாதனை புரிந்த – ருதுராஜ் கெய்க்வாட் கருத்து

மேலும் ஒரு கேப்டனாக என்னுடைய அறைக்கதவுகள் எப்போதும் எல்லா வீரருக்காகவும் திறக்கப்பட்டு இருக்கும் என்று தோனியை போன்று பதில் அளித்து இருந்தார். தோனியிடம் இருக்கும் பல விடயங்கள் பாண்டியவுடன் ஒத்து போவதால் இந்திய அணியின் டி20 கேப்டனாக பாண்டியா அசத்தலாக செயல்படுவார் என்று தான் கருதுவதாக அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement