தோனியிடம் இருந்து நாங்க கத்துக்கிட்டது இதுதான். 7 சிக்ஸர் அடித்து சாதனை புரிந்த – ருதுராஜ் கெய்க்வாட் கருத்து

ruturaj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் முக்கியமான ஒன்றான விஜய் ஹசாரே தொடரானது தற்போது லீக் சுற்றுகளை கடந்து காலிறுதி சுற்றானது நடைபெற்று வருகிறது. இந்த காலிறுதி சுற்றில் ஒரு ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.

Ruturaj gaikwad

- Advertisement -

பின்னர் 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய உத்தரப்பிரதேச அணியானது 47.4 ஓவர்களில் 272 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய மகாராஷ்டிரா அணியின் கேப்டனும், துவக்க வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் 49-வது ஓவரில் :

தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர் மற்றும் நோ பாலில் ஒரு சிக்ஸர் அடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர் என ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை பறக்க விட்டு வரலாற்று சாதனையை படைத்தார். அவரது இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டினை பெற்று வருகிறது.

Ruturaj

இந்நிலையில் இப்படி ஏழு சிக்ஸர்களை அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை புரிந்த அவர் வெற்றியையும் தோல்வியையும் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தோனியிடமிருந்தே தான் கற்றுக் கொண்டதாகவும் அது குறித்து சில தகவல்களையும் ஆகாஷ் சோப்ராவுடன் நடைபெற்ற உரையாடலில் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடியும் ஒரு போட்டியில் நாங்கள் தோல்வியடைந்த பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் சற்று அமைதியாக இருந்தோம். அப்போது தோனி ஒரு கேப்டனாக எங்களிடம் வந்து ரிலாக்ஸ் ஆக இருங்கள் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று ஆறுதல் கூறினார். அதோடு சில விஷயங்கள் நாம் நினைத்தவாறு நடக்கவில்லை எனில் நடுநிலையாக எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தோனி தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க : என்னா மனுஷன்யா – பாகிஸ்தான் மண்ணுக்கும் மக்களுக்கும் பென் ஸ்டோக்ஸ் செய்த மாபெரும் உதவி, குவியும் பாராட்டுக்கள்

ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தோனி அணியின் சூழல் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வார். தோனி நடத்தும் மீட்டிங்குகள் மிகவும் குறைந்த நேரமாக தான் இருக்கும். ஆனால் அந்த சந்திப்பிற்கு பிறகு எங்கள் அணி முழுமையான உத்வேகம் பெறும். அந்த வகையில் பல விடயங்களை தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement