- Advertisement -
ஐ.பி.எல்

நம்ம சென்னை பையனை நம்பி அவங்க ஏலத்தில் எடுத்தது சரியான முடிவு. குஜராத் அணியை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

அகமதாபாத் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதோடு அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையும் சமன் செய்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் 96 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 39 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறிய வேளையில் அந்த இன்னிங்க்ஸை சாய் சுதர்சன் அருமையாக கட்டமைத்தார்.

- Advertisement -

அப்படி மூன்றாவது இடத்தில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு கட்டத்தில் போட்டியில் 9 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே குவித்து இருந்த அவர் அதன்பிறகு சந்தித்த 38 பந்துகளில் 90 ரன்கள் என மொத்தமாக சந்தித்த 47 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 96 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான பேட்டிங்கே அந்த அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. அதோடு அவரது இந்த அதிரடியான ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் கூட பாராட்டி இருந்தார். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் இந்த இறுதி போட்டியில் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் 21 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சனை குஜராத் அணி தேர்வு செய்தது மிக சரியான ஒரு முடிவு என தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : சாய் சுதர்சன் ஆழ்வார்பேட்டை கிளப்பில் ஆடினார். அதனை தொடர்ந்து ஜாலி ரோவர்ஸ் கிளப்பிற்காக ஆடினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அணியில் ஆடினார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

இதையும் படிங்க : WTC Final : நாக்பூர் மாதிரி லண்டனும் இந்தியாவுக்கே சாதகமா இருக்கு, ஆனா ஜெயிக்க போறது எங்க ஆட்டம் தான் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

அடுத்தது அவரது கரியர் என்ன என்று யோசிக்கும்போது குஜராத் அணி அவரை அடிப்படை விலையில் மிகச் சரியாக தேர்வு செய்துள்ளது. சாய் சுதர்சன் ஒரு ப்ராப்பர் பிளேயர் என குஜராத் அணியின் அந்த தேர்வை பாராட்டி அஸ்வின் தனது கருத்தினை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by