பேட்டிங்கில் அரைசதம் அடிச்சதெல்லாம் சரிதான். ஆனா அஷ்வினின் இந்த சொதப்பல் ஆபத்தானது – விவரம் இதோ

Ravichandran Ashwin RR .jpeg
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடியதால் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வாய்ப்பினைப் பெற்ற இளம் வீரர்கள் பலரும் தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். மேலும் ஜூன் 9ஆம் தேதி துவங்க இருக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Ashwin Hetmayer

- Advertisement -

அதேவேளையில் இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சில வீரர்கள் இந்திய அணிக்கு தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதே வேளையில் ஒரு சில வீரர்கள் தங்களது மோசமான செயல்பாட்டால் அணியில் இடத்தை இழக்கும் ஆபத்தான நிலைக்கும் சென்றுள்ளனர். அந்த வகையில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் டி20 கிரிக்கெட்டில் தனது இடத்தை இழக்கும் வாய்ப்பு ஆபத்தில் உள்ளார். ஏனெனில் கடந்த ஆண்டு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்.

ஆனால் அதனை தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாகவே t20 கிரிக்கெட்டில் சொதப்பி வரும் அவர் ஐபிஎல் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய அவர் 12 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதோடு நிறைய ரன்களையும் அவர் விட்டுக் கொடுத்துள்ளார். இது அஸ்வினின் வழக்கமான செயல்பாடு கிடையாது. ஏனெனில் பந்துவீச்சில் நிறைய வேறியேஷன்களை வைத்திருக்கும் அஷ்வின் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தார்போல் பந்துவீசி விக்கெட் எடுக்கும் லாவகம் கொண்டவர். ஆனால் இந்த சீசனில் அதனை நாம் பார்க்க முடியாமல் போனது.

Ashwin

ஆனால் அதேவேளையில் பேட்டிங்கில் இந்த சீசனில் அவர் ஒரு அரைசதம் அடித்தது மட்டுமின்றி சிலமுறை இக்கட்டான வேளையில் ராஜஸ்தான் அணிக்காக முன்கூட்டியே களமிறங்கி பேட்டிங்கிலும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்தார். ஆனால் அஷ்வின் இப்படி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் பந்துவீச்சில் சொதப்பி வருவது ஆபத்தானது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் அஷ்வின் ஒரு ஸ்பின்னர் தானே தவிர அவர் ஒரு பேட்ஸ்மேன் கிடையாது.

- Advertisement -

எனவே அவர் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற என்னும் எண்ணத்தை விடுத்து பந்துவீச்சில் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தும் எண்ணத்தை கையிலெடுக்க வேண்டும். தேவைப்படும்போது பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அது போதும் அதுவே சரியாக இருக்கும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவது எல்லாம் சரிதான். ஆனால் அதே வேளையில் பந்துவீச்சு தான் அவருடைய முதன்மை வேலை என்பதை அஷ்வின் உணர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : அடுத்த சீசனில் அந்த பையனை பெரிய வீரராக மாற்றுவேன் – ராஜஸ்தான் கோச் சங்கக்காரா அதிரடி பேட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வரும் அஷ்வின் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாட வேண்டுமென்றால் இப்படி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி விட்டு, பந்துவீச்சில் கடின பட்டால் நிச்சயம் டி20 இந்திய அணியில் இருந்து அவர் புறக்கணிக்கப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணியில் ஏற்கனவே ஜடேஜா, அக்ஷர் பட்டேல் போன்றோர் நல்ல பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளராக இருப்பதனால் அஷ்வின் டி20 போட்டிகளில் அவர்களுடன் போட்டி போட முடியாத நிலையும் இருப்பதாக விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement