2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி டெஸ்ட் பிளேயர். அஷ்வினுடன் சேர்ந்து 4 வீரர்கள் போட்டி – உங்க ஓட்டு யாருக்கு?

Ashwin
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக அந்த ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதினை வழங்கும் அந்த வகையில் நடப்பு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் 4 வீரர்களை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும் அவரோடு சேர்ந்து ஜோ ரூட், இலங்கை வீரர் கருணரத்னே, மற்றும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமிசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

2021

இந்த நான்கு வீரர்களில் யாருக்கு அதிக ஓட்டு கிடைக்கிறதோ அவர்கள் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 2021 ஆம் ஆண்டு அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுமார் 365 ஓவர்கள் வீசி அதில் 78 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கிய உள்ள அஷ்வின் இந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 337 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சென்னை மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது சதம் விளாசிய அவர் ஆஸ்திரேலிய தொடரின் சிட்னி போட்டியில் ஹனுமா விஹாரி உடன் இணைந்து சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ய உதவியது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஆண்டு முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வினுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin

அதேபோன்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இந்த ஆண்டு முழுவதுமே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 15 போட்டிகளில் விளையாடி 1708 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 5 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : நேரலையில் இந்திய வீரர்களை புகழ்ந்து அவமானப்பட்ட கவாஸ்கர். இதெல்லாம் தேவையா? – நடந்தது என்ன?

அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற போட்டியில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேமிசன் 7 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இலங்கை வீரரான கருணரத்னே 7 போட்டிகளில் விளையாடி 902 ரன்களை குவித்துள்ளார். அதில் நான்கு சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நால்வரில் உங்கள் ஓட்டு யாருக்கு?

Advertisement