பஞ்சாப் கேப்டனாக தவானுக்கு பதிலாக சாம் கரண்.. ராஜஸ்தானுக்கு விளையாடாத அஸ்வின், பட்லர்.. காரணம் இதோ

PBKS vs RR 2
- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் 27வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்த 2 அணிகளுமே தங்களுடைய கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தன. எனவே இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இருப்பினும் பஞ்சாப் அணியின் கேப்டனாக இளம் இங்கிலாந்து வீரர் ஷாம் கரண் டாஸ் வீச வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதாவது ஷிகர் தவான் லேசான காயத்தை சந்தித்ததால் அவருக்கு பதிலாக ஷாம் கரண் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதிரடி மாற்றங்கள்:
மேலும் அவருக்கு பதிலாக அதர்வா டைட் விளையாடுவார் என்றும் சாம் கரண் அறிவித்தார். மறுபுறம் ராஜஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்படுவதாக கேப்டன் சஞ்சு சாம்சன் அறிவித்தார். குறிப்பாக நட்சத்திர துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 100% ஃபிட்டாக இல்லை என்பதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக கேப்டன் சாம்சன் தெரிவித்தார்.

அவருக்கு பதிலாக இந்த தொடரில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி வரும் ரியன் பராக் ஓப்பனிங்கில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இப்போட்டியில் லேசான காயத்தை சந்தித்திருப்பதால் விளையாட மாட்டார் என்று சஞ்சு சாம்சன் அறிவித்தார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக 11வது இடத்தில் களமிறங்கி சதமடித்த டானுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்படுவதாகவும் சாம்சன் தெரிவித்தார். அதே போல காயத்தால் விளையாடாத ஜோஸ் பட்லருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவல் தங்களுடைய அணியில் விளையாட உள்ளதாகவும் சாம்சன் அறிவித்தார்.

இதையும் படிங்க: ரிங்கு, கில்லுக்கு இடமில்லை.. துபே உட்பட தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட முகமது கைப்

அந்த வகையில் நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகியது இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே பின்னடைவாக அமைந்தது என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் தவிக்கும் பஞ்சாப் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அதே போல ராஜஸ்தான் அணியும் தங்களுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வெற்றியை பதிவு செய்வதற்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement