ஐ.சி.சி பவுலர்கள் தரவரிசை : 2 ஆம் இடம்பிடித்த தமிழக வீரர் அஷ்வின் – அதுலயும் ஒரு ஸ்பெஷல் இருக்கு

Ashwin
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் இவ்வேளையில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ashwin 1

பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் இருக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அஷ்வினும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த டாப்-10 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு ஸ்பெஷலான சாதனையையும் செய்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்திய வீரராக டாப் 10-ல் இருக்கும் ஒரே இந்திய வீரராக அஷ்வின் திகழ்கிறார். அதுமட்டுமின்றி இந்த டாப் 10-ல் இவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.

ashwin 3

எனவே டாப் 10-ல் இருக்கும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி இரண்டாவது இடத்திலும் அஷ்வின் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் தரவரிசை பொறுத்தவரை முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லாபுஷேன் இருக்கிறார். அவரை தொடர்ந்து 2வது இடத்தில் ஜோ ரூட் நீடிக்கிறார்.

இதையும் படிங்க : 3 ஆவது அம்பயர் செய்த தவறு. இப்படியா பண்ணுவீங்க – கோவத்தில் கத்திய கோலி, அஷ்வின் – நடந்தது என்ன?

மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், நான்காவது இடத்தில் வில்லியம்சன், ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவேளையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement