டெஸ்ட் தரவரிசை : டாப் 10ல் 2 ஆம் இடம் பிடித்தது மட்டுமின்றி வித்தியாசமான பவுலராக திகழும் – தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவில் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் சறுக்கலை சந்தித்தாலும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

இந்த வருடம் மட்டும் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் நாற்பத்தி நான்கு (44) விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கும் அஷ்வின் 840 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களைத் தொடர்ந்து டிம் சவுதி மூன்றாவது இடத்திலும், ஹேசல்வுட் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணி சார்பாக பும்ரா 10வது இடத்தில் உள்ளார். இந்த டாப் 10 பட்டியலில் தொடர்ச்சியாக அஷ்வின் 2-வது இடத்தில் நீடித்து வந்தாலும் இதில் ஒரு விசேஷமான விடயம் உள்ளது. அந்த விடயம் யாதெனில் இந்த டாப் 10-ல் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஸ்பின்னர் அஷ்வின் மட்டுமே அவரை தவிர மற்ற அனைவரும் வேகப்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : போன போட்டியில ஒரு சாதனை படைத்த அஷ்வின் இந்த போட்டியிலும் சாதனை படைக்க காத்திருக்காரு

இதன் மூலம் டாப் 10 பட்டியலில் ஒரே ஸ்பின்னராக அஷ்வின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement