போன போட்டியில ஒரு சாதனை படைத்த அஷ்வின் இந்த போட்டியிலும் சாதனை படைக்க காத்திருக்காரு

Ashwin
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான மைல்கல்லாக இந்த சாதனை பார்க்கப்படுகிறது.

ashwin

அந்த சாதனையை தகர்த்த அஷ்வின் தற்போது மும்பையில் இன்று தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலும் ஒரு சாதனைக்கு குறி வைத்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு மட்டும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் இதுவரை 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்த ஆண்டு 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பது மட்டுமின்றி நான்காவது முறையாக ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.

wicket

wickets

- Advertisement -

இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் அஷ்வின் ஆகியோர் மூன்று முறை ஒரு ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அவர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் முதல் பந்துவீச்சாளராக 4 ஆண்டுகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவை சேர்க்க என்ன காரணம் தெரியுமா ? – அவரது ஸ்பெஷல் என்ன?

மும்பை மைதானத்தில் இன்று தொடங்கியுள்ள இந்த இரண்டாவது போட்டியில் நிச்சயம் அஷ்வின் இந்த சாதனையை படைத்து வரலாற்றில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மும்பை மைதானத்தில் அஷ்வின் 30 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் அவர் இந்த ஆறு விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்கும் கை கொடுப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement