அஷ்வின் சொன்ன வார்த்தை பலிச்சிருக்கு.. வேகப்பந்து வீச்சில் கலக்கிய ஆர்.சி.பி வீரர் – நடந்தது என்ன?

Ashwin-and-Vishak
- Advertisement -

ஆர்.சி.பி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கொல்கத்தா அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. ஆர்.சி.பி அணி சார்பாக விராட் கோலி 83 ரன்களையும், கேமரூன் கிரீன் 33 ரன்களையும், தினேஷ் கார்த்திக் இறுதி கட்டத்தில் 20 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியானது 16.5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களையும், சுனில் நரேன் 47 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்தப்போட்டியில் ஆர்.சி.பி அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான விஜயகுமார் வைஷாக்கின் பந்துவீச்சு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

ஏனெனில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ், யஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கியிருந்தபோது விஜயகுமார் வைஷாக் மட்டும் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் விஜயகுமார் வைஷாக் குறித்து அண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய கருத்து தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. அந்த வகையில் விஜயகுமார் வைஷாக் குறித்து அஸ்வின் கூறியதாவது : தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போது அதனை நான் நேரில் பார்த்தேன். அப்போது சேப்பாக்கம் மைதானம் பிளாட் பிட்சாக இருந்ததால் நல்ல பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவை இருந்தது.

இதையும் படிங்க : “ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கார் விருதே குடுக்கலாம்” கம்பீர் கோலி ஹக் குறித்து – சுனில் கவாஸ்கர் கருத்து

அதனை சரியாக கனித்த விஜயகுமார் வைஷாக் மிகச்சிறப்பாக ஸ்லோ கட்டர்களை வீசி தமிழக அணிக்கு சிரமத்தை கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக நான்கு நாட்களும் உயிரைக் கொடுத்து பந்துவீசிய விஜயகுமார் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும் நிச்சயம் அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என்று தோன்றுவதாக அஸ்வின் கூறியிருந்தார். அவர் கூறியதைப் போன்றே தற்போது விஜயகுமார் வைஷாக் அசத்தலாக பந்துவீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement