ரஹானே கேப்டன் இல்லை.! 3வது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி கேப்டன் இவரா.?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது மீதமுள்ள மூன்று போட்டியில் ஒன்றினை இழந்தால் கூட இந்திய அணி தொடரை இழந்துவிடும் இங்கிலாந்து அணியோ இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முன்னைப்பில் உள்ளது.

ashwin india

- Advertisement -

நடந்து முடிந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் கோலி முதுகு வலியால் அவதிப்பட்டது நாம் அறிந்ததே இந்நிலையில் கோலி 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் நியமிக்க பட வாய்ப்புள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கடந்த டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் இவரே அதிக ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ள ரஹானே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணி நிர்வாகம் ரஹானேவை கேப்டனாக விரும்பவில்லை மேலும் ரஹானே பார்மில் உள்ளாரா என்ற சந்தேகமும் உள்ளது அடுத்த ஆட்டத்தில் அவருடைய இடமும் கேள்விக்குறி ஆகியுள்ளது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் எண்ணத்துடன் பி.சி.சி.ஐ உள்ளதாக தெரிகிறது

ashwin 2

அஸ்வின் டெஸ்ட் போட்டியில் அனுபவமிக்க வீரர் மேலும் தமிழக அணி மற்றும் ஐ.பி.எல் அணியில் கூட இதற்குமுன் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார் எனவே இதனை கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது எனினும் கோலி முதுகு வலியில் இருந்து முழுமையாக மீண்டு வந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் அவரே தொடர்ந்து கேப்டனாக செயல்படுவர்.

Advertisement