ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையுடன் (மே 27) முடிவடைந்தது. அன்று நடந்த போட்டியில் ஹைத்ராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கை பற்றிய சென்னை அணிக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு முன்னாள் சென்னை அணியின் வீரரான அஸ்வின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த தொடரில் 8 அணிகள் பங்குபெற்று 60 போட்டிகளில் விளையாடியாது. கடந்த ஞாயிற்றுகிழமை(மே 27 ) இந்த தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது கோப்பையை கைப்பற்றியது.
சென்னை அணியின் இந்த வெற்றிக்கு அஸ்வின் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சில ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுவிட்டார். அந்த அணியில் கேப்டனாக இருந்த வந்த அஸ்வின் அந்த அணியை பிளே ஆப் சுற்றிற்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை.
Amazing achievement by @ChennaiIPL last night, 3rd Ipl title and joint best alongside @mipaltan. A big congrats to @msdhoni and his team. #IPL2018
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 28, 2018
இருப்பினும் அஸ்வின் சென்னைவாசி என்பதாலும், ஏற்கனவே சென்னை அணியில் விளையாடியதாலும், இந்த ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” சென்னை அணி அற்புதமாக வெற்றி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று, மும்பை அணியின் சாதனையை சமன் செய்துள்ளது தோனிக்கு அவரது அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ” என்று பதிவிட்டிருந்தார்.