சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியிலிருந்து முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா(6) மற்றும் சுப்மன் கில்(29) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்தார்.
இதையடுத்து விராட் கோலி 11, ரஹானே 1, புஜாரா 73,வாசிங்டன் சுந்தர் 85 மற்றும் பண்ட் 91 ரன்களும் குவித்தனர். இதையடுத்து தற்போது இந்திய அணி 337 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் முன்னிலை வைத்திருக்கிறது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இந்திய பவுலர்கள் மிகவும் போராடி வந்தனர். அப்போது அஸ்வின் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பந்தை எங்கே பிட்ச் செய்வது மற்றும் எந்த வேகத்தில் வீசுவது போன்ற ஆலோசனைகளை கேட்டார். அதற்கு விராட் கோலியும் ஆலோசனை கூறினார். ஆனால் அந்த ஆலோசனைகள் எதுவும் இந்திய அணிக்கு சாதகமாக முடியவில்லை.
இதனால் அஸ்வின் இந்திய துணைக் கேப்டனான ரஹானேவிடவும் ஆலோசனை கேட்க தொடங்கினார். ரஹானே கேப்டன்சிப்பில் பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஹானேவை பவுலர்கள் கேப்டன் என்றும் அழைப்பார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானம் முதலில் பேட்டிங் சாதகமாக இருக்கும் என்பது அறிந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையில் இந்திய பவுலர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.