மன்கட் அடுத்து சர்ச்சையான முறையில் டி என் பி எல் போட்டியிலும் பந்துவீசிய அஷ்வின் – வைரலாகும் வீடியோ

Ashwin
- Advertisement -

டி என் பி எல் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கில்லிஸ் அணியும் மோதின.

ashwin 1

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரின்போது மன்கட் செய்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அஷ்வின் தற்போது டிஎன்பிஎல் தொடரிலும் வித்தியாசமாக பந்து ஒன்றை வீசியுள்ளார். திண்டுக்கல் அணிக்கு கேப்டனாக அஸ்வின் நேற்றைய போட்டியில் விளையாடினார்.

அஸ்வின் நேற்றைய போட்டியில் பந்து வீச வரும் பொழுது வித்தியாசமாக வீசுகிறேன் என்று ஓடி வந்து மெதுவாக கையை சுற்றாமல் கையிலிருந்து அப்படியே பந்தை தூக்கி வீசினார். இதைப் பார்க்கும்போது சிறுவர்கள் ஸ்டம்பை பார்த்து நேராக பந்துவீசும் போல இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று நினைத்து வித்தியாசமாக பந்துவீசிய அஷ்வினின் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. அவர் வித்தியாசமாக வீசிய அந்த பந்து வைடாக சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement