பந்துவீச தடை செய்யப்படவுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் – காரணம் இதுதான்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இந்திய அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அஸ்வின் இடம்பெற்று விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது தமிழ்நாட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக அஸ்வின் விளையாடி வருகிறார். இந்த தொடரில் நேற்று மதுரை அணிக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கேப்டன் அஸ்வின் வித்தியாசமாக பௌலிங் செய்தார். அந்த பவுலிங் முறை சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது நேற்று மதுரை அணிக்கு எதிரான போட்டியின் போதும் வித்தியாசமான முறையில் பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினார். அவரது இந்த வித்தியாசமான பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் இதுபோன்று ஸ்டைலில் செய்தால் அவருக்கு பந்துவீச தடை செய்யும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விசித்திரமான பந்துவீச்சை சர்வதேசப் போட்டிகளில் வீசினால் icc ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.

Advertisement