பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்றும் அஸ்வின் – யாரோட ஸ்டைல் தெரியுமா

ashwin1
- Advertisement -

பிங்கர் ஸ்பின்னரான அஸ்வின் கடந்த ஆண்டு பந்துவீச்சில் சோபிக்கவில்லை. இதனால் அஸ்வின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.இந்நிலையில் புதிதாக வந்த இளம் ஸ்பின்னர்கள் ரிவிஸ்ட் ஸ்பின்னில் கலக்கிவருகின்றனர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த ரிவிஸ்ட் ஸ்பின் மூலமாக விக்கெட்டுகளை அள்ளிவருகின்றனர்.

ashwin

- Advertisement -

நிலமை மோசமாவதை உணர்ந்த அஸ்வின் என்ன செய்யலாம் என்று யோசித்த பின்னர் தற்போது அவரது பந்துவீச்சு முறையை மாற்றியுள்ளார்.இப்போது நடைபெற்றுவரும் இராணி கோப்பை போட்டியில் அஸ்வின் புதுஸ்டைலான லெக்ஸ்பின்னில் தான் பந்து வீசி வருகிறார்.

கடந்த பத்தாண்டுகளாக பிங்கர் ஸ்பின் போட்ட அஸ்வின் மூன்றே மாதத்தில் தன்னுடைய பந்துவீச்சு ஸ்டைலை மாற்றி லெக்ஸ்பின் போடுவதை பல பந்துவீச்சாளர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றார்களாம்.

anil

இந்த புது ஸ்டைல் பின் அஸ்வினின் கிரிக்கெட் எதிர்காலத்தை மாற்றும் என்றும் விரைவில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.அஸ்வின் வீசும் லெக் ஸ்பின் ஆனது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான அனில் கும்பளே பந்துவீச்சை பிரதிபலிப்பது போல உள்ளது என்பது தான் கூடுதல் தகவல்.

Advertisement