பேட் கம்மின்ஸ்ஸை பின்னுக்கு தள்ளி அஷ்வின் முதலிடம் பிடிக்க வாய்ப்பு – அதுக்கு அவர் என்ன செய்யனும் தெரியுமா?

Ashwin
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தனர். குறிப்பாக அஷ்வின் மற்றும் ஜடேஜா என இருவருமே ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

இப்படி அவர்கள் அசத்திய வேளையில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலையும், பவுலர்களின் தரவரிசை பட்டியலையும் வெளியிட்டது. அதன்படி நேற்று மதியம் வெளியான அறிவிப்பின்படி இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது என்று அறிவிக்கப்பட்டது.

Pat Cummins

அதேவேளையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கடுத்து வெளியான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 867 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து இந்த பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின் 846 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் பேட் கம்மின்ஸ்ஸை பின்னுக்கு தள்ளி அஸ்வின் முதலிடம் பிடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அஷ்வின் முதல் இடத்தினை பிடிக்க வேண்டுமெனில் : அஸ்வின் மற்றும் பேட் கம்மின்ஸ்க்கு இடையே உள்ள 21 புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs AUS : நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ

ஏற்கனவே நடைபெற்று முடிந்த நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அஸ்வின் இன்னும் மீதம் உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட ஒரு 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கூட அவர் டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறுவது உறுதி.

Advertisement