டெஸ்ட் வரலாற்றில் ஹர்பஜன் கடந்து ஜாம்பவான் பட்டியலில் இணைந்த அஷ்வின் – குவியும் வாழ்த்துக்கள்

ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக ஏற்கனவே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த அஷ்வின் அண்மையில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி தற்போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றும் ஒரு சாதனையை அவர் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

Ashwin

அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கின் மிகப்பெரிய ரெக்கார்டு ஒன்றினை அஷ்வின் இந்த முதல் போட்டியில் தகர்த்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

- Advertisement -

அவர்கள் இருவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தல் உள்ளார். இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் இந்த அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்து முன்னேறியுள்ள அஷ்வின் இந்த டெஸ்ட் இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 418 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியல் இதோ :

1) அணில் கும்ப்ளே 132 போட்டிகள் – 619 விக்கெட்டுகள்

- Advertisement -

2) கபில் தேவ் 131 போட்டிகள் – 434 விக்கெட்டுகள்

3) ரவி அஷ்வின் 81* போட்டிகள் – 418 விக்கெட்டுகள்

- Advertisement -

4) ஹர்பஜன் சிங் 103 போட்டிகள் – 417 விக்கெட்டுகள்

5) இஷாந்த் சர்மா 105 போட்டிகள் – 311 விக்கெட்டுகள்

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஷ்வின் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் அவர் இன்னும் 30 முதல் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் மேலும் பலரது சாதனைகளை அஷ்வின் முறியடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க : திருமண நிச்சயதார்த்தத்தை முடித்த ஷர்துல் தாகூர். அவர் திருமணம் செய்ய இருக்கும் பெண் – யார் தெரியுமா?

இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் அஷ்வின் வெறும் 81 போட்டிகளிலேயே 418 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதால் இனிவருங்காலத்தில் அவர் மேலும் 200 விக்கெட்டுகளை கூட வீழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement