திருமண நிச்சயதார்த்தத்தை முடித்த ஷர்துல் தாகூர். அவர் திருமணம் செய்ய இருக்கும் பெண் – யார் தெரியுமா?

Mittali
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தற்போது விளையாடி வருபவர். இதுவரை இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இன்று தனது நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பேட்டிங்கிலும் அரை சதங்களும் அடித்து அசத்தியுள்ளார்.

thakur 1

- Advertisement -

அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தனது நிச்சயதார்த்தத்தை முடித்த அவர் சில புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி இன்று நடைபெற்ற அவரது நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 75 பேர் மட்டுமே கலந்து கொண்டு இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

thakur

அவரது இந்த நிச்சயதார்த்தத்தை அடுத்து அவர் திருமணம் செய்ய இருக்கும் அந்த பெண் யார் ? என்பது குறித்த கேள்வி அதிக அளவில் எழுந்துள்ளது. அதன்படி 30 வயதான ஷர்துல் தாகூர் திருமணம் செய்ய இருப்பது அவரது நீண்டகால தோழி மித்தாலி பாருள்கர் என்பவர் தான் என்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : மோட்டார் பைக் விபத்தில் சிக்கி 15 மீட்டர் ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட ஆஸ்திரேலிய பிரபல வீரர் – விவரம் இதோ

மேலும் இந்திய அணிக்காக அவர் விளையாடும் முன்னரே நீண்ட நாட்களாக பழகி வந்த தனது காதலியை அவர் தற்போது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement