கடவுள் அருளால் கிராமத்தை சேர்ந்த எனக்கு இது பெருசு.. பாண்டியா தான் இந்த திட்டம் கொடுத்தாரு.. அஸ்வனி பேட்டி

Ashwani kumar 22
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற பன்னிரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 16.2 ஓவரில் 116க்கு ஆல் அவுட்டாகி சொதப்பியது. அதிகபட்சமாக ரகுவன்சி 26 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக 23 வயதில் மிரட்டிய அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அடுத்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா 13, வில் ஜேக்ஸ் 16 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மற்றொரு துவக்க வீரர் ரியான் ரிக்கள்டன் அதிரடியாக 62* (41) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அறிமுக ஆட்டநாயகன்:

அவருடன் சேர்ந்து மிரட்டிய சூரியகுமார் யாதவ் 27* (9) ரன்கள் எடுத்ததால் 12.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட மும்பை தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. கொல்கத்தாவுக்கு ரசல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அஸ்வனி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் மொஹாலியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த தமக்கு இது மிகப்பெரிய விஷயம் என்று அஸ்வனி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் அறிமுகப் போட்டியிலேயே அழுத்தத்தின் கீழ் அசத்துவதற்கு கேப்டன் பாண்டியா கொடுத்த திட்டம் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “நன்றாக உணர்கிறேன். ஆரம்பத்தில் அழுத்தமாக இருந்தாலும் எங்களுடைய அணி சூழ்நிலை நீண்ட நேரம் விடவில்லை”

- Advertisement -

கடவுளின் அருளால்:

“கொஞ்சம் திட்டத்தை தீட்டி வைத்திருந்தேன். ஆனால் அறிமுகப் போட்டியில் உனது வழியில் மகிழ்ச்சியுடன் பௌலிங் செய் என்று எங்களுடைய அணி நிர்வாகம் சொன்னார்கள். ஷார்ட்டாகவும் பேட்ஸ்மேன்களின் உடல் பகுதியிலும் பந்தை போடு என்று ஹர்திக் பாய் சொன்னார். அது எனக்கு விக்கெட்டுகளை கொடுத்தது. இந்த வாய்ப்பைப் பெற்று அதில் ஆட்டநாயகன் விருது வென்றது எனக்கு மிகப்பெரிய விஷயம்”

இதையும் படிங்க: 2008லிருந்து ஆட்டநாயகன் பரிசு மாறல.. பவுலர்களை காப்பாற்ற இதை பெருசாக்குங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

“இது பற்றி எப்போதும் நினைத்ததில்லை. எனது செயல்முறைகளைப் பின்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றதில் மகிழ்ச்சி. மொஹாலி மாவட்டத்தில் ஜஹான்ஜேரி எனும் கிராமத்தில் இருந்து இங்கே வந்த எனக்கு கடவுளின் அருள் காரணத்தாலேயே இந்த நல்ல முடிவு கிடைத்துள்ளது. என்ன நடக்கும் என்று நான் கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தேன். எனது அறிமுகப் போட்டியை பார்க்க எனது வீட்டில் ஆவலுடன் காத்திருந்தார்கள். இன்று போல வரும் போட்டிகளிலும் அவர்களை நான் பெருமயடைய வைப்பேன்” என்று கூறினார்.

Advertisement