நீ பஞ்சாப்காரன் அவரை பாத்து பயப்படாதான்னு பாண்டியா சொன்னாரு.. சாதனை பற்றி தெரியாது.. அஸ்வனி பேட்டி

Ashwani Kumar
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. சென்னை மற்றும் குஜராத்துக்கு எதிராகத் தோல்வியை சந்தித்த அந்த அணி மூன்றாவது போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய 23 வயது இளம் வீரர் அஸ்வனி குமார் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக தனது முதல் போட்டியில் கொல்கத்தாவின் அனுபவ வீரர் மற்றும் கேப்டன் ரஹானேவை அவுட்டாக்கிய அவர் மனிஷ் பாண்டேவையும் காலி செய்தார். அதை விட அதிரடி ஃபினிஷர் என்று அறியப்படும் ரிங்கு சிங் விக்கெட்டை எடுத்த அஸ்வனி அடித்து நொறுக்கக்கூடிய ரசல் விக்கெட்டையும் எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அவருடைய அபார பந்து வீச்சால் கொல்கத்தாவை 119க்கு சுருட்டிய மும்பை எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

பஞ்சாப்காரனுக்கு பயம் எதுக்கு:

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வனி படைத்தார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த தமக்கு கடவுள் அருளால் இது பெரிய விஷயம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த நீ யாருக்கும் பயப்படாமல் எதிரணிகளை தெறிக்க விட வேண்டும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தமக்கு ஆதரவுக் கொடுத்ததாக அஸ்வனி கூறியுள்ளார். குறிப்பாக ஆண்ட்ரே ரசலை பார்த்துப் பயப்படாமல் பௌலிங் செய்யுமாறு பாண்டியா சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஐபிஎல் இணையத்தில் அஸ்வனி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரசல் விக்கெட்:

“அது நல்ல உணர்வாக இருக்கிறது. அறிமுகப் போட்டியில் இந்தளவுக்கு சிறப்பாக செயல்படுவேன் என்று நான் நினைக்கவில்லை. “நீ பஞ்சாப்பில் இருந்து வந்தவன், பஞ்சாபியர்கள் பயமற்றவர்கள். எனவே எதிரணியை பயமுறுத்தி மகிழ்ச்சியுடன் பவுலிங் செய்” என்று ஹர்டிக் பாண்டியா பாய் என்னிடம் சொன்னார். ரஹானே கொடுத்த கேட்ச்சை திலக் வர்மா பிடிக்கத் தடுமாறிய போது பிடிப்பார் என்று நம்பினேன்”

இதையும் படிங்க: எங்க டீமோட தற்போதைய தடுமாற்றத்திற்கு காரணமே மெகா ஏலம் தான் – ரமன்தீப் சிங் ஓபன்டாக்

“ஏனெனில் உங்களுடைய முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தால் மற்ற அனைத்தும் சரியாகச் செல்லும். ஆண்ட்ரே ரசல் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் அவர் மிகவும் பெரியவர். அவரைப் பார்த்து பயப்படாதே என்று ஹர்திக் பாண்டியா பாய் சொன்னார். எனவே அவருக்கு எதிராக எனது திட்டத்தை மட்டும் பின்பற்றி பௌலிங் செய்தேன். முதல் வீரராக நான்கு விக்கெட்டுகள் எடுத்தேன் என்பதை எனக்கு தெரியாது” எனக் கூறினார்.

Advertisement