சூதாட்டத்தால் 5 ஆண்டு முடிந்த தடை..! மீண்டும் அணியில் கால் பதிப்பாரா இந்த அதிரடி ஆட்டக்காரர்?

bangladesh
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு காலகட்டத்திலும் சூதாட்ட சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் வருகின்றன சமீபத்தில் கூட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோர் பால் டேம்பரிங் பிரச்சனையில் சிக்கி கிரிக்கெட் விளையாட தடை பெற்றனர் இதுபோன்று 2013ல் தடை பெற்ற வங்கதேச வீரரான முகமத் அஷ்ரபுல் 5 ஆண்டுகள் முடித்து வெளிவர இருக்கிறார்.

asraful

- Advertisement -

கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் போது மேட்ச் பிக்சிங் பிரச்னையால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் 5 ஆண்டு தடைபெற்றார் முகமத் அஷ்ரபுல்.சர்வதேச மற்றும் உள்ளுர் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார் அதற்கடுத்து 2016 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாட கிரிக்கெட் வாரியத்தால் அனுமதிக்க பட்டார். தற்போது அவருடைய தண்டனை காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது

தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் தற்போது 34 வயது நிரம்பியுள்ளதால் அவருடைய ஆட்டத்திறன் பழையபடி இருக்குமா என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது மீண்டும் வங்கதேச அணி அவரை தேர்ந்தெடுக்குமா என்பது சற்று சிரமம்தான் ஏனென்றால் தற்போது உள்ள அணி சிறப்பாக செயல்பட்டு அதிக அளவில் வெற்றிகளை குவித்து வருகிறது பெரிய அணிகளை கூட சமீபகாலமாக சுலபமாக வென்றுள்ளது

ashraf ton

முகமது அஷ்ரபுல் இதுவரை 177 ஒருநாள் ஆட்டத்தில் 3468 ரன்களும் 61 டெஸ்ட் போட்டியில் 2737 ரன்களும் குவித்துள்ளார் வங்கதேச அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் இவர்தான் இவரது சிறப்பான ஆட்டத்தால் சீக்கிரமாக வங்கதேச அணியின் கேப்டனாகவும் வந்தார்.இவருடைய வருகை வங்கதேச அணிக்கு பலம் சேர்க்குமா?இவருக்கு அணியில் இடம் கிடைக்குமா?

Advertisement