விடைபெற்ற வெஸ்ட் பெங்கால் எக்ஸ்பிரஸ். வறுமையை வென்ற வங்க கதாநாயகன் – இந்திய அணியின் சீனியர் ஓய்வு

Dinda
- Advertisement -

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் அசோக் டின்டா. இவருக்கு தற்போது 36 வயதாகிறது. இந்திய அணிக்காகவும் மேற்கு வங்க அணிக்காகவும் கடந்த 16 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். முதல் தர போட்டியில் 2005 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக மேற்கு வங்க அணிக்காக அறிமுகமானவர் இவர். அதன்பின்னர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

Dinda 1

- Advertisement -

முதல் தரப் போட்டிகளில் மட்டும் தற்போது வரை 116 போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் சராசரி 28. லிஸ்ட் ஏ கிரிக்கெட் எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்து 151 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் டிண்டா. உள்ளூர் வட்டாரத்தில் மாபெரும் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அசோக் திண்டா. இந்திய அணிக்கும் 13 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் ஆடி மொத்தம் 29 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.

இந்திய அணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அதன் பிறகு இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி வந்த அவர், திடீரென பத்திரிக்கையாளர்களை அழைத்து தான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

Dinda 2

மேலும் தன்னுடைய கிரிக்கெட் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் குடும்பத்தார் தனது மனைவி உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார். மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி தான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் அசோக் திண்டா.

Dinda 3

தனது இளமைக்காலத்தில் வறுமையுடன் தினமும் 10 கிலோமீட்டர் நடந்தே வந்து கிரிக்கெட் பயிற்சியை செய்தவர் இவர். மேற்கு வங்க ஏழை இளைஞர்களின் ஹீரோவாக பார்க்கப்படுபவர் அசோக் திண்டா. என்னதான் சமூகவலைதளத்தில் இவர் குறித்து அதிகமான விமர்சனங்கள் இருந்தாலும் தனது விடா முயற்சியின் மூலம் வறுமையை வென்றவர் இவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Advertisement