IND vs RSA : அவர் இல்லாத சமயத்தில் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார் – ரிஷப் பண்ட் மீது முன்னாள் வீரர் அதிருப்தி

Pant-3
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 9-ஆம் தேதியன்று துவங்கியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த தென் ஆப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங்கை வெளிப்படுத்தி 211/4 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் இஷான் கிசான் 76 (48) ரன்களை குவிக்க கடைசி நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 31* (12) ரன்களை குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

miller

- Advertisement -

அதை தொடர்ந்து 212 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) குயின்டன் டி காக் 22 (18) பிரிடோரியஸ் 29 (13) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்து சுமாரான தொடக்கம் கொடுத்தனர். அதனால் 81/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் 10 ஓவர்களுக்குப் பின் மிரட்டலாக பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.

சொதப்பல் கேப்டன்ஷிப்:
அந்த ஜோடியில் தடுமாறினாலும் கடைசி வரை அவுட்டாகாமல் டுஷன் 75* (46) ரன்கள் எடுக்க மறுபுறம் கொஞ்சமும் தடுமாறாமல் மிரட்டலாக பேட்டிங் செய்த மில்லர் 64* (31) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா முதல் போட்டியிலேயே இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. மறுபுறம் பேட்டிங்கில் போராடி எடுத்த ரன்களை பந்துவீச்சில் வாரி வழங்கிய இந்தியா ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்து தொடரில் பின்தங்கியுள்ளது.

chahal

முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் அவரின் இடத்தில் பொறுப்புடன் செயல்படாமல் சொதப்பலாக செயல்பட்டார். ஏனெனில் எந்த பவுலரை எந்த நேரத்தில் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு கேப்டன் எடுக்க வேண்டிய முக்கிய முடிவு என்ற நிலைமையில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்ற பவுலர்களை அவர் பயன்படுத்திய விதம் தவறாக இருந்தது. குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து ஊதா கோப்பையை வென்று நல்ல பார்மில் இருக்கும் சஹாலுக்கு முக்கிய நேரத்தில் 2 ஓவர்களை மட்டுமே வழங்கிய அவர் ஒரு சுழல் பந்து வீச்சாளரான அவரிடம் போய் 3-வது ஓவராக 20-வது ஓவரை பந்துவீச கொடுத்தார்.

- Advertisement -

நெஹ்ரா அதிருப்தி:
இந்நிலையில் மொத்தம் வீசிய 13 பந்துகளில் 26 ரன்களை வழங்கினாலும் மில்லர் – டுஷன் ஜோடி களமிறங்கிய போது அவர்களை செட்டிலாக விடாமல் மிடில் ஓவர்களில் சஹாலை பந்து வீச அழைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆசிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ஆனால் வேகத்தை விரும்பக்கூடிய அவர்கள் அதிரடியை துவங்கும் போது சஹாலுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது சரியான முடிவல்ல என்று தெரிவிக்கும் அவர் ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி குஜராத்துடன் ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமை பயிற்சியாளராக சாதனை படைத்த அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் ஒரு இளமையான கேப்டன் என்பதால் இதில் அவர் கற்றுக்கொண்டு முன்னேறுவார் என்று நம்புகிறேன். ஆனால் சஹாலை போன்ற ஒரு பவுலர் 2 ஓவர்கள் மட்டுமே வீசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

- Advertisement -

“குறிப்பாக சேசிங்கில் சரிவிலிருந்து மீண்டெழுந்த தென் ஆப்பிரிக்காவுக்கு டுஷன் – மில்லர் ஜோடி களத்தில் இருந்த போது அவர் பந்து வீசியிருக்க வேண்டும். அந்த தருணத்தில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக தவறு செய்துள்ளார். அதேப்போல் பவர் பிளே ஓவர்களில் 6 ஓவர்களை வீசுவதற்கு அவர் 5 பவுலர்களை உபயோகப்படுத்தினார்”

Pant

“அவர் (சஹால்) 2 ஓவர்களை மட்டுமே வீசினார். சில சமயங்களில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தால் லெக் ஸ்பின் பவுலர்களை பிடித்து வைத்திருப்பார்கள். அவரை போன்ற விக்கெட் எடுக்கும் பவுலரை மிடில் ஓவர்களில் பிடித்து வைப்பது முக்கியமானது என்றாலும் ஒரு சர்வதேச பேட்ஸ்மேனை ரன் எடுக்க விடாமல் தடுத்து நிறுத்துவதற்கு அவரின் விக்கெட்டை எடுத்தே தீரவேண்டும். அந்த சமயத்தில் தடுப்பாட்டம் போன்ற பவுலிங் வேலைக்கு ஆகாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : அடப்பாவிங்களா இதிலும் ஊழலா ! வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் – ரஞ்சி கோப்பையில் அம்பலமான அதிர்ச்சி செய்தி

அடுத்ததாக வரும் ஜூன் 12இல் நடைபெறும் 2-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement