இவர் மட்டும் ரெடின்னு சொன்னா இவரைத்தான் முதலில் எனது அணியில் சேர்ப்பேன் – நெஹ்ரா ஓபன் டாக்

Nehra

இந்திய அணிக்காக தோனி விளையாடி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் ஆவதால் இனி அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றும் மேலும் இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனியின் பெயர் நீக்கப்பட்டது. இனி அவரது மறுபிரவேசம் என்பது கனவாகவே இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

Dhoni

மேலும் அவர் இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் அப்படி திரும்ப வேண்டும் என்றால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து வாய்திறக்கவில்லை மேலும் ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு தோனி நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தோனியின் ஓய்வு குறித்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. அந்த வகையில் தற்போது தோனியின் ஓய்வு குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஸ் நெஹ்ரா கூறுகையில் :

Nehra

தோனி எனக்கு எந்த அளவிற்கு தெரியுமோ அந்த அளவிற்கு அவர் இந்திய அணிக்கான கடைசி போட்டியை மகிழ்ச்சியாக விளையாடி விட்டார் என்றும் நன்றாக தெரியும். மேலும் தோனி நம்மிடமும், ஊடகங்கள் இடமும் எதையும் நிரூபிக்க அவசியம் இல்லை அவர் குறித்து ஓய்வு குறித்து இதுவரை பேசாததாலே இந்த விவாதங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

மேலும் தோனி மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய நெஹ்ரா கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளை வைத்து தோனியின் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் நடந்து விடாது. அவரின் ஆட்டத்திறனில் சற்றும் குறைவில்லை. கண்டிப்பாக நான் அணியின் பயிற்சியாளராக, கேப்டனாக இருந்திருந்தால் தோனியை இப்பவும் ஓகே சொன்னால் முதலில் தேர்வு செய்து இருப்பேன்.

nehraa

உலக கோப்பை அரைஇறுதி போட்டியில் கூட அவர் அவுட் ஆகும் முன்பு வரை அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. அந்த அளவிற்கு தோனி சிறப்பான ஆட்டத்தை தந்து வருகிறார் இருப்பினும் அவர் தனது கடைசி போட்டியை விளையாடி முடித்து விட்டார் என்று தான் நினைப்பதாக நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.